உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ரா தரிசனம்; உலகில் மிகப் பெரிய சுயம்பு நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆருத்ரா தரிசனம்; உலகில் மிகப் பெரிய சுயம்பு நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் கோவிலில் ஆருத்ரா தரிசனம்- உலகில் மிகப் பெரிய சுயம்பு நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தில் தேவாரப் பாடல் பெற்ற உமாமகேஸ்வரர் கோயில் உள்ளது. சோழர் கட்டடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் தனி சன்னதியில் 8.5 அடி உயரம் கொண்ட உலகில் மிகப் பெரிய சுயம்பு நடராஜர்  திருமேனி உள்ளது. இக்கோவிலில்  மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதனை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தணம் சாத்தப்பட்டு, மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து நடராஜ பெருமானுக்கு ஆபரணங்கள், ருத்ராட்ச மாலை, புலித்தோல், பட்டாடை மற்றும் செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !