சென்னையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: அனுக்ரஹ பாஷணம் செய்து ஆசி
ADDED :8 days ago
சென்னை; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று காலை (ஜனவரி 2, 2026, வெள்ளிக்கிழமை) சென்னை நாரத கான சபையில் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபையின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். விழாவில் இசைக்கலைஞர்களின் குழு பஞ்சரத்ன கிருதிகளை வழங்கி சுவாமி வரவேற்றது. தொடர்ந்து, பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுக்ரஹ பாஷணம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.