ராஜதர்பார் அலங்காரத்தில் கரூர் அபய பிரதான ரங்கநாத பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :5 days ago
கரூர்; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவிலில், நேற்று ஏழாம் நாள் ராப்பத்து ராஜ உற்சவத்தில், தர்பார் அலங்காரத்தில் பெருமாள் காட்சிய ளித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் முடிந் தது. கடந்த, 30ல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ராப் பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று ஏழாம் நாளில் ராப்பத்து உற்சவத்தில் ராஜ தர்பார் அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று வாகனம், குதிரை 7ல் திருக் ஆண்டாள் கோலம் அலங்காரம், வரும், 8ல் ராப்பத்து, 9ல் ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.