உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகோபில மடம் சுவாமி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி

அகோபில மடம் சுவாமி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மங்களாசாசனம் செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


அகோபில மடம் 46ம் பட்டம் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் சுவாமிகள், நேற்று மாலை, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் உள்ளலட்சுமி ஹயக்ரீவர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் தாதம் தலைமையில் வரவேற்பு குழுவினர் மற்றும் பக்தர்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, சுவாமி கோவிலில் மங்களாசாசனம் செய்தார். பின்னர், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !