ஆழ்வார்குறிச்சியில் நாளை சிறப்பு பூஜை
ADDED :4673 days ago
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சியில் நாளை திருமுருகன் திருச்சபை சார்பில் சிறப்பு பூஜை நடக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வதற்காக ஆழ்வார்குறிச்சியில் முருக பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். திருமுருகன் திருச்சபை சார்பில் தெப்பக்குளம் வரம்தரும் விநாயகர் கோயிலில் நாளை (8ம்தேதி) சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 8மணிக்கு கணபதி ஹோமமும், 11 மணிக்கு கும்பாபிஷேகம், சிறப்பு தீபாராதனையும், மதியம் 1மணிக்கு அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. மாலை 5மணிக்கு பாப்பான்குளம் செல்லும் ரோட்டிலுள்ள தீர்த்தகரை முருகன் கோயிலில் இருந்து தீர்த்தம் காவடி ஆட்டத்துடன் ஊர்வலமாக வரம் தரும் விநாயகர் கோயில் வருகிறது. பின்னர் சிறப்பு பஜனை, பூஜை, தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை செல்லப்பாண்டியன் தலைமையில் திருமுருகன் திருச்சபையினர் செய்து வருகின்றனர்.