உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈஷாவில் தைப்பூசத் திருவிழா: பக்தர்கள் பாதயாத்திரை

கோவை ஈஷாவில் தைப்பூசத் திருவிழா: பக்தர்கள் பாதயாத்திரை

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷாவில், தைப்பூச திருவிழாவையொட்டி, முளைப்பாரியால் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி தேவியின் உருவப் படத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.


கோவை ஈஷா யோகா மையத்தில், எனது 2010ம் ஆண்டு தைப்பூச தினத்தன்று, சத்குருவால், லிங்க பைரவி திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த நாளை கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் லிங்க பைரவியின் பிரதிஷ்டை தினவிழா மற்றும் தைப்பூச திருவிழா, ஈஷாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு, தைப்பூச திருவிழாவையொட்டி, ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என ஏராளமான மக்கள் ஒன்றிணைந்து, முளைப்பாறியால் அலங்கரிக்கப்பட்ட தேவியின் திருவுருவத்தை, பல்லக்கில் ஏந்தி, ஆலாந்துறையில் இருந்து ஊர்வலமாக, லிங்க பைரவிதேவி சன்னதிக்கு வந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி, பூக்கரகம் மற்றும் பூவோடு ஏந்தி தேவியின் நாமங்களை முழங்கியபடி பாதயாத்திரையாக வந்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் மேற்கொண்ட பைரவி சாதனா என்ற 21 நாட்கள் ஆன்மிக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சி லிங்க பைரவி தேவி வளாகத்தில் நடந்தது. மாலையில், லிங்க பைரவி தேவகி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் தமிழக மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !