தேய்பிறை அஷ்டமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :251 days ago
கோவை: கோவை, உக்கடம் பை-பாஸ் ரோடு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் தை மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அமைந்துள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காலபைரவர் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.