ஆதனூர் கோவிலில் சிறப்பு ஆராதனைகள்
ADDED :4686 days ago
உளுந்தூர்பேட்டை: ஆதனூர் அழகிரி வெங்கடேச பெருமாள் சவுந்தரவள்ளி தாயார் கோவிலில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது.உளுந்தூர்பேட்டை அடுத்த ஆதனூர் அழகிரி வெங்கடேச பெருமாள் சவுந்தரவள்ளி தாயார் கோவிலில் செவ்வாய் கிழமை சிறப்பு ஆராதனைகள் நடந்தது. அதனையொட்டி சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், விபூதி, தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு திருமஞ்சன அலங்காரம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் சுவாமி, அருணாசலேஸ்வரர் உண்ணாமலை, நவகாளியம்மன் சாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை அர்ச்சகர் சுப்பையர் செய்திருந்தார்.