உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை சிறப்பு பூஜை வழிபாடு

ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை சிறப்பு பூஜை வழிபாடு

தென்காசி: தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை (10ம் தேதி) சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது.தென்காசி ஆய்க்குடி ரோட்டில் ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இங்கு தமிழ்மாத கடைசி வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நாளை (10ம் தேதி) மார்கழி மாத கடைசி வியாழக்கிழமையை முன்னிட்டு காலை, மதியம் சிறப்பு ஆரத்தி, இரவு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் பூஜை வழிபாடு நடக்கிறது.மாலையில் அன்னபூரணிக்கு சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை வக்கீல் ரவிசங்கர், சுப்புலட்சுமி துரைசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !