செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம்
ADDED :232 days ago
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு மகா சிவராத்திரி அன்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு ஊரணி பொங்கலும், மாலை 3.00 மணிக்கு பொன்பத்தி ஏரியில் அண்ணமார் பூஜையும் நடந்தது. மாலை சாமி வீதி உலாவும், இரவு 12 மணிக்கு இருள் முகத்துடன் மயானம் செல்லுதலும் நடந்தது. 17ம் தேதி காலை 6 மணிக்கு குறத்தி அவதாரமும், 12 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். மதியம் 1 மணிக்கு பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் சூழ மாயானம் புறப்பட்டு சென்று மாலை 6 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரை மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.