உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை அய்யப்பன் பூஜா சங்கத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாஹ விழா

கோவை அய்யப்பன் பூஜா சங்கத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாஹ விழா

கோவை: 33வது ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாஹ மஹோத்ஸவம், ராம்நகர் சத்யமூர்த்தி சாலையிலுள்ள ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தில், நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைக்கப்பட்டது.


இதில் சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், சீனியர் வக்கீல் நாகசுப்ரமணியம், விழா ஒருங்கிணைப்பாளர் ராமராஜ், ஸ்ரீனிவாஸ்பட், ராஜேஷ்பட், முருக ராமநாதன், பலிமாரு மடம் ஸ்ரீ ஸ்ரீவித்யா ராஜேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள்,மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடம் ஸ்ரீ சுபுதேந்திரதீர்த்த ஸ்வாமிகள், பலிமாருமடம் ஸ்ரீவித்யா தீஷதீர்த்த ஸ்வாமிகள், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், ஸப்தாஹ மஹோத்ஸவ சேர்மன் சுந்தரவடிவேலு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாஹ கார்யாசரண ஸமிதி மற்றும் ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாஹ சேவாசங்கா ஆகியவை செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !