ஆழீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :17 hours ago
ஊத்துக்கோட்டை: ஆழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
எல்லாபுரம் ஒன்றியம் லட்சிவாக்கம் கிராமத்தில், ஆனந்தவல்லி சமேத ஆழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து இருந்தது. கிராம மக்கள் பங்களிப்புடன், கோவில் சீரமைக்கும் பணி முடிந்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக, கடந்த 20ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. இதில், நான்கு கால யாக பூஜை நடந்தது.
நேற்று காலை 11:15 – 11:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திருக்கல்யாண உத்சவம் மற்றும் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.