பழநி கோயிலில் அதிகரித்த பக்தர்கள்
ADDED :20 hours ago
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். இக்கோயிலுக்கு ஏராளமான வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். கோயிலுக்குச் செல்ல பக்தர்கள், ரோப் கார், வின்ச்சில் பல மணி நேரம் காத்திருந்தனர்.
கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.