உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிளி வாகனத்தில் அருள்பாலித்த கந்த பெருமான்

கிளி வாகனத்தில் அருள்பாலித்த கந்த பெருமான்

திருப்போரூர்: திருப்போரூரில் மாசி பிரம்மோத்சவ பெருவிழாவில் முதல் நாள் உத்சவமான நேற்று முன்தினம் இரவு, கிளி வாகனத்தில் கந்தபெருமான் வீதி உலா வந்தார்.


திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ பெருவிழா நேற்று முன்தினம் 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு உத்சவ விழாக்கள் நடைபெறுகின்றன.


முதல் நாள் உத்சவமான நேற்று முன்தினம் இரவு, கந்தபெருமான் கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். தொடர்ந்து இரண்டாம் நாள் உத்சவமான நேற்று காலை தொட்டி உத்சவத்திலும், இரவு பூத வாகனத்திலும், சுவாமி மாட வீதி உலா வந்தார்.


பிரதான விழாவான தேர் திருவிழா, வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, கோவில் முழுதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.


அதேபோல், முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை நாளான நேற்று, கோவிலில் ஏராளமான பக்தர்கள் கூட்டமும் காணப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !