உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

ரிஷிவந்தியம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி வள்ளி, தேவசேனா சமதே சுப்ரமணிய சுவாமி பங்குனி உத்திர தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


அதனையொட்டி, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஆகம விதிமுறைப்படி பூஜை செய்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு காப்பு கட்டி, சிறிய தேரில் எழுந்தருளச் செய்து கோவில் உட்பிரகாரம் வலம் வந்தது. வரும் 30ம் தேதி காலை பால்குடம் ஊர்வலம், இரவு சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், வரும் 1ம் தேதி அலகு போடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !