திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவ விழா
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், பங்குனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். தற்பொழுது ராஜகோபுரம் திருப்பணி நடைபெற்று வருவதால், ஆகம விதிப்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நடைபெறவில்லை. இதனை அடுத்து நேற்று ஏக தின பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்பட்டது. அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு கொடியேற்றம், ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகசபெருமாள் கண்ணாடி அரை மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், பத்து வாகனங்களில் அடுத்தடுத்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சுவாமிக்கு திருமஞ்சனம் தீர்த்தவாரி, 10:00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், தேவஸ்தான பவர் ஏஜென்ட் கிருஷ்ணன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.