உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை 6 அடி உயர்த்தும் பணி துவக்கம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை 6 அடி உயர்த்தும் பணி துவக்கம்

திருவொற்றியூர்: சாலை மட்டத்தைவிட தாழ்வாக இருந்த திருவொற்றியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை, 150 ஜாக்கிகள் வாயிலாக 6 அடிக்கு உயர்த்தும் பணி, நேற்று துவங்கியுள்ளது.


திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, வடக்கு மாடவீதி சந்திப்பில், அங்காள பரமேஸ்வரி – நாச்சந்தி நாயகி அம்மன் கோவில் உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான இக்கோவில், சாலை மட்டத்தைவிட 3 அடி தாழ்வானது. அதனால், கோவிலில் முழுதாக திருப்பணி மேற்கொள்ள, 50 லட்சம் ரூபாய் செலவாகும் என, மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ‘ஆர்.ஜெ., சிவில் இன்ட்ஸ்ரியல், ஹவுஸ் லிப்டிங் மற்றும் ஷிப்டிங்’ எனும் தனியார் நிறுவனம், 20 லட்சம் ரூபாய் செலவில் ஜாக்கிகள் வாயிலாக கோவிலை உயர்த்த ஒப்பந்தம் எடுத்தது. இதையடுத்து நேற்று, ஜாக்கிகள் வாயிலாக கோவிலை உயர்த்தும் பணிகள், நேற்று காலை துவங்கின. கோவில் வளாகத்தின் சுற்றுச்சுவர், சன்னிதிகளின் கான்கிரிட் தளங்களில், ஜாக்கிகள் வைக்கும் அளவுக்கு கத்தரிக்கப்பட்டன. மொத்தம் 150 ஜாக்கிகள் பொருத்தி, சுற்றுச்சுவரை 3 அடி, மைய மண்டபம் 6 அடி வரை உயர்த்தப்பட உள்ளது. தினம் 15 ஊழியர்களால், அரை அடி உயரத்திற்கு ஜாக்கிகள் வாயிலாக, கோவில் கட்டுமானம் முழுதும் உயர்த்தப்படும் ஒரு மாதத்தில் இப்பணிகள் முடிக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !