உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி திருவாதிரை; செவிலிமேடு ராமானுஜருக்கு வெள்ளி கவச அலங்காரம்

பங்குனி திருவாதிரை; செவிலிமேடு ராமானுஜருக்கு வெள்ளி கவச அலங்காரம்

செவிலிமேடு: பங்குனி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


காஞ்சிபுரம் செவிலிமேடில் ராமானுஜர் கோவில் உள்ளது. பங்குனி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. அதை தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !