வடக்குவாசல் செல்லியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா
ADDED :1 days ago
மேலூர்; அ. வல்லாளப்பட்டி, அரியப்பன்பட்டியில் உள்ள வடக்குவாசல் செல்லியம்மன் பங்குனி மாத பொங்கல் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. வெள்ளி மலையாண்டி கோயில் அருகில் உள்ள மந்தையிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பெண்கள் வெங்கல பானையில் பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை சுமந்து ஒன்றரை கி. மீ., தொலைவில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர். நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. இத் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.