துடியலூர் கருப்பராயர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :194 days ago
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள கருப்பராயர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கணபதி பூஜை, அர்ச்சனை, யாகசாலை பூஜைகள் நடந்தன. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்தபின், செம்பகாளியம்மன் கோயில் அர்ச்சகர் பிரவீன் குமார் சிவம் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.