திருமலை திருப்பதியில் ராம நவமி வழிபாடு; ஸ்ரீராமருக்கு ஸ்நபன திருமஞ்சனம்
ADDED :194 days ago
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில் ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமலையில் ஆண்டு தோறும் ராமர் ஜென்ம தினத்தன்று வழிபாடு நடத்தி வருகிறது தேவஸ்தானம்.அதன்படி இன்று ராம நவமி உற்ஸவத்தை முன்னிட்டு காலை ஏழுமலையான் கருவறையில் உள்ள சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ராமரை கோயிலில் உள்ள கல்யாண உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருள செய்து அவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6:௦௦ முதல் 7:௦௦ மணி வரை ஏழுமலையான் கோயில் தங்க வாயில் அருகில் சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ராமரை எழுந்தருள செய்து அவர்களுக்கு ஆஸ்தானம் நடைபெறும்.