உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னானி முத்துமாரியம்மனுக்கு சீர் கொண்டு வந்து பூஜை செய்த பக்தர்கள்

பொன்னானி முத்துமாரியம்மனுக்கு சீர் கொண்டு வந்து பூஜை செய்த பக்தர்கள்

பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ முத்துமாரியம்மன், கோவில் திருவிழாவில் பக்தர்கள் அம்மனுக்கு சீர் எடுத்து வந்து பூஜை செய்தனர். 


பொன்னானி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 36 ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை துவங்கியது. இதில் பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு சீர் எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஸ்ரீ மகா விஷ்ணு கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் கொண்டு வந்த பட்டு, பழங்கள், விளக்குகள் மற்றும் பல்வேறு பொருட்களை அம்மனுக்கு சீர் வரிசையாக, எடுத்து வந்தனர். மேள வாத்தியங்கள் முழங்க, கோவில் நிர்வாகிகள் முன்னிலையில், அம்மன் கோவில் பக்தர்கள் மற்றும் விஷ்ணு கோவில் நிர்வாகத்தினர் இணைந்து இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சீர் வரிசை பொருட்கள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதில் இரண்டு கோவில்களின் நிர்வாகத்தினர், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !