கோயில் படிக்கட்டுகளில் உலா வந்த சிங்கக் கூட்டம்; அலறியடித்து ஓடிய பக்தர்கள்
குஜராத் மாநிலம், ஜூனாகத் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தாதர் மலைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் அண்மையில் அதிகாலை வேளையில், தாதர் மலையின் சுமார் 3,200 அடி உயரத்தில் உள்ள படிக்கட்டுப் பகுதியில், ஒரு பெண் சிங்கம் மற்றும் குட்டிகள் உட்பட மொத்தம் 5 சிங்கங்கள் உலா வந்தது. இத்தலத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், படிக்கட்டுகளில் சிங்கக் கூட்டம் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜராத் வனத்துறையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் பக்தர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைத்தனர். பக்தர்கள் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பயணிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறித்தியுள்ளனர். இந்த சிலர் தங்களது மொபைல் போன்களில் இந்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர், இது தற்போது வைரலாகி வருகிறது.