உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி வழிபாடு

புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி வழிபாடு

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, இன்று காலை 10:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் 11:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !