உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாயுவை விரட்டும் பிடாரி!

வாயுவை விரட்டும் பிடாரி!

பெருமாள் கோயில்களில், திருமாலின் திருவடிகளைத் தலையில் தாங்குவதாகக் கருதி செய்யும் வழிபாடு சடாரி. இதனைஸ்ரீசடாரி என்று குறிப்பிடுவர். ஸ்ரீ என்பது லட்சுமியையும், சடாரி என்பது திருமாலையும் குறிக்கும். இதன்  மகிமை பற்றி பாதுகா ஸஹஸ்ரம் என்னும் நூலில் வேதாந்ததேசிகர் பாடியுள்ளார். சடம் என்னும் ஒருவகை வாயு தீண்டுவதால் தான் உயிர்களுக்கு அறியாமை உண்டாகிறது. அந்த வாயு மீது கோபம் கொண்டு விரட்டியதால்,  நம்மாழ்வாருக்கு சடகோபன் என்ற பெயர் ஏற்பட்டது. எனவே சடாரியை நம்மாழ்வாரின் சொரூபமாக போற்றுவர். இதனைத் தாங்கும்போது பெருமாள், தாயார் இருவரின் திருவடிகளையும் தலையில் தாங்குவதாக ஐதீகம். இதைத் தாங்கினால், உலக வாழ்வு நிலையற்றது என்றும், இறைவனின் திருவடியே நிரந்தரமானது என்ற ஞானமும் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !