உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெலிங்டன் கோதண்ட ராமர் கோவிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு

வெலிங்டன் கோதண்ட ராமர் கோவிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு

குன்னூர்; குன்னூர் வெலிங்டன் கோதண்ட ராமர் கோவிலில் இன்று ராமநவமி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கோதண்டராமர் கோவிலில் இன்று ராம நவமியையொட்டி காலை முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. மூலவரான ஸ்ரீ கோதண்டராமர், சீதா தேவி, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்தப்பட்டது. பகலில் சிறப்பு ராமாயண பாராயணம் செய்யப்பட்டது. பிரசாத விநியோகம், நடந்தது. ஏற்பாடுகளை ஊர் மக்கள், செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !