உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூரில் குதிரை வாகனத்தில் கோதண்டராமர் உலா

திருவொற்றியூரில் குதிரை வாகனத்தில் கோதண்டராமர் உலா

சென்னை: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், ராம நவமி உத்சவத்தின் எட்டாம் நாளான இன்று கோதண்டராமர் கையில் சாட்டை ஏந்தி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்தார். 


திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட இக்கோவிலில், பங்குனி மாதம் தோறும், ராம நவமி உத்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவில், ராம நவமி உத்சவத்தின் எட்டாம் நாளான இன்று கோதண்டராமர் கையில் சாட்டை ஏந்தி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !