உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏற்றம் தரும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்

ஏற்றம் தரும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்

தல புராணம்:  தல புராணம் மரத்தைத் தலம மாக கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெயர் பெற்றது, (ஆம்ரம் மாமரம். ஏகம் ஆம்ரம் ஏகாம்ரம் ஒற்றை மாம ம. இம்மாவடியின்கீழ் இறைவன் எழுந தருளியிருப்பதால் இறைவன்; ஏகாம்ரதா தர் எனப் பெயர் பெற்றார். இப்பெயரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று. ஒரு மாலின்கீழ் அரையர்" என்னும் தனிப்பாடல் தொடர் இங்கு நினைக்கத் தக்கது. கம்பர் என்பது தமிழில் வழங் கும் பெயர்) கச்சி என்பது ஊரின் பெயர். தவம் செய்த அம்பிகைக்கு இறை வனார் மாமரத்தினடியில் காட்சி தந்து அருள்புரிந்த பதி உமா தேவி இறைவனி டம் கேட்ட ஆகம முறைப்படி வழிபட விரும்பி இத்தலத்தில் இறைவனைப் பூசித்தார். மூலவர் அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிருதிவி (மணல்) லிங்கம் ஆகும்.பூசிக்கும்போது, வெள் னம் பெருக்கெடுத்து எழ. தான் மண லால் நிறுவிய லிங்கத் திருமேனியைக் காமாட்சியம்மை தழுவி அணைக்க, இறைவன் தன திருமேனியில் அம்பிகை யின் வளைத் தழும்பும் முலைச்சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த பிரான் என்றும் பெயர்.


காமாட்சியம்மை முப்பத்திரண்டு அறங்கள் செய்த இடம் உமை, திருமகள். ஆகிய முறையே வழி பட்ட ஏகம்பம், காயாரோகணம், கச்சபே சம்.ஆகிய கோவில்கள் உள்ள தலம்.

கண் பார்வையிழந்த சுந்தரர் இத்தலத் திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலம்.

பிரம்மா, திருமால், குத்திரர் பூசித்த இலிங்கங்கள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக்கம்பம். நல்லக்கம்பம் எனப்படுகின்றன.


விகடசக்கர விநாயகர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக வீற்றிருக்கி றார். சலந்தரனை அழிக்கத் திருமால் இறைவனை வேண்டிப் பெற்ற சக்கரா யுகத்தை, வீரபத்திரர்மேல் ஏவியபோது அவர் அணிந்திருந்த வெண்டலைமா லையில் உள்ள ஒருதலை அதை விழுங் தை கிவிட்டது. திருமால் பெரிதும் வருத் தினார். இதையறிந்த விஷ்வக்சேனர் வீரபத்திரரிடம் சென்று வேண்டி, அவர் சொல்லியவாறே பிரம கபாலம் சிரிக்கும் வகையில் விகடக் கூத்தாடினார். அக்கூத்தைக் கண்டு பிரமகபாலம் சிரிக்க, சக்கரப்படை கீழே விழுந்தது. அப்போது அருகிலிருந்த விநாயகர், அதை விரைந்து எடுத்துக்கொண்டு, மறுமுறையும் விககூத்து ஆடுமாறு பணிக்க அவரும் அவ்வாறே ஆடினார். மகிழ்ந்து விநாயகரும் சக்கரப்படை யைத் யைத் தந்த தந்தருளினார் ஆதலின் விகடக் கூத்தினை விரும்பிக்கொண்டமையால் விகடசக்கர விநாயகர் என்று பெயர் பெற்றார். 


தல வரலாறும், சிறப்பும்: சைவ குரவர்கள் பாடல் பெற்ற தலமா கவும், ஆழ்வார் அங்குள்ள நிலாத்திங்கள் துண்டப்பெருமாளை மங்களாசாசனம் செய்த தலமாக ஏகாம்பரநாதர் கோவில் அமைத்துள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய சைவ குரவர்கள் நால்வ ராலும் தேவாரப்பாடல் பாடப் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்த பாடப் பெற்றுள்ளது. இத்தலம் குறித்து. கோவில் மூலவரை தரிசனம் முடித்து சுற்றி வரும் போது, திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டப்பெரு மாள் சன்னிதி அமைந்துள்ளது.


சக்தி பீடமாகிய காமக்கோடிப் பீடம்:  இத்தல விநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகள் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பா லிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டது. 


கோவில் தல வரலாறு: கைலாயத்தில் சிவன் தியானத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினான். இதனால் கிரகங் கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக கும்படி வேண்டினாள், அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழி படு விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.


இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங் கையை பூமியில் ஓடவிட்டார் சுங்கை வெள்ளமாக பாய்ந்துவர, தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பான லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன் னித்தருளி, திருமணம் செய்துகொண் டார். அம்பாள அணைத்த சிவன் என்ப தாய் சுவாமிக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் இருக்கிறது. 


சுந்தராகுக்கு அருள்: ஞாயிறு பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத் தில சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத் தலத்திற்கு வநதபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகி ழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால், அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும், சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்த திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் கொடுத்த சிவன். இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள் செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. 


பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மண் நிலம் தலமாகும். கருவ றையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக் கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாச னைப் பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது. சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆல கால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப் படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச் சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திரு முடி முடியில் இருக்கும் கங்கை, சந்இறைவன் திருப்பெயர் ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர் இறைவியார் திருப்பெயர் ஏலவார்குழலி, காமாட்சியம்மை.


ஒற்றை மாமரம்: ஏகாம்பரநாதர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்ம் ரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடி வில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இவற்றை சிவனது திருமணகோலம் என்கின்றனர். அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். ஏக+ஆமரம்: ஏகாம்பரம். முடித்தாராம். ஏக+ஆம் ஒரே மாமரம் என்று பெயர். கோவிலின் உள்ளே சபாநாதர் மண்ட பத்துக்கு எதிரில் உள்ள துரணில், சன காதி முனிவர் கீழே வீற்றிருக்க, அம்மை அய்யனுக்கு பொட்டிடுவது போல அமைந்துள்ள அனமந்து காட்சியைக் கண்டு வாரு வடி வழி பட்டால், கணவன் மனைவி இடையில் அந்தியோன்யம் அதிகரித்து, வாழ்வாங்கு வாழ்வார்கள். மேலும் ஒருவருக்கு ஒரு வா விட்டுக்கொடுத்து வாழாமல், பிரிந்து வர் போன கணவன் மனைவி இருவரும் நம்பிக்கையுடன் வந்து வழிபட்டால், இறைவன் அருளால் ஒன்று சேர்ந்து வாழ்வர் என்பது ஐநீகம். மிகவும் புனிதமான இம்மரம், நான்கு வேதங்களையும் தான்கு கிளைகளாகக் கொண்ட தெய்வீக மாமரம் இனிப்பு. புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வ கைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !