கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் ராமநவமி விழா
ADDED :187 days ago
அவிநாசி; சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவிலில் 40ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவ விழா நடைபெற்றது. அவிநாசி அடுத்த சேவூரில் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவிலில் 40ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி மஹோத்சவ விழா நடைபெற்றது. ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு,சகஸ்ர நாம பாராயணம், அபிஷேக ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.