வயலுார் முருகன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தரிசனம்
ADDED :186 days ago
திருச்சி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நேற்று, வயலுார் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சேலம் மற்றும் பொள்ளாச்சியில் உள்ள சித்தர்களின் நினைவிடங்களுக்கு சென்று வழிபாடு நடத்தும், முதல்வர் ரங்கசாமி, நேற்று, திருச்சி, வயலுார் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். தேர்தல் நேரத்தில், வெற்றிகளை தரும் தமிழ் கடவுளாக கருதப்படும் வயலுார் முருகன் கோவிலுக்கு சென்று ரங்கசாமி வழிபட்டு இருப்பது, அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.