உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு இன்று காலை செப்பு தேரோட்டம் நடந்தது. இன்று காலை 6:20 மணிக்கு கோயிலில் இருந்து ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு செப்புதேருக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 7:10 மணிக்கு கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல ரத வீதி சுற்றி வந்து ஒரு மணி நேரத்தில் தேர் நிலையம் அடைந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !