உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திரம்: பக்தர்கள் பரவசம்

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திரம்: பக்தர்கள் பரவசம்

இராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பழமை வாய்ந்த வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில் பால் காவடி, வேல் காவடி, சப்பரக்காவடி, பறவை காவடி எடுத்து வெகு சிறப்பாக நடைபெற்றது. 


ராமநாதபுரம் மாவட்டம் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள வழி விடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா மார்ச் 23ம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டப்பட்டு  சிறப்பாக துவங்கியது. ராமநாதபுரம் நொச்சிவயல் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் இருந்து வேல் போட்டு பால்குடம், பால் காவடி, வேல் காவடி, பறவை காவடி, சப்பர காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து சிவன்கோவில் ரதவீதி, அரண்மனை, வண்டிக்கார தெரு வழியாக ராமநாதபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள வழிவிடு முருகன் கோவிலிற்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இதில் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதற்காக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்தின் முன்பாக பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !