உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பழநி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பழநி: பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, வள்ளி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நேற்று இரவு, 7:00 மணிக்கு நடந்தது. மணக்கோலத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.  இரவு சன்னதி வீதி, கிரி வீதிகளில் வெள்ளி தேரோட்டம் நடந்தது. இன்று மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !