பாதாள செம்பு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கோலாகலம்
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாதாளசெம்பு முருகன் கோயில் உள்ளது. இன்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு மூலவருக்கு பாலாபிஷேகம், ராஜ அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், 2 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடக பக்தர்கள் பலர், கருங்காலி மாலை சாற்றி தரிசனம் செய்தனர்.
* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் மூலவர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது.