உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரன் குன்று கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

குமரன் குன்று கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

அன்னூர்: குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று நடந்தது.


குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், 39 வது ஆண்டு பங்குனி உத்திர தீர்த்த காவடி தேர்த் திருவிழா கடந்த 30ம் தேதி துவங்கியது. பக்தர்கள் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து கொடுமுடி புறப்பட்டுச் சென்று நேற்று அன்னூருக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர். இன்று காலை 5:30 மணிக்கு அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து காவடி குழுவினர் பாதயாத்திரையாக குமரன் குன்று கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். காலை 10:00 மணிக்கு தீர்த்த காவடிகளை குமரன் குன்று கோவில் வளாகத்தில் சமர்ப்பித்து அருள் பெற்றனர். கல்யாண சுப்பிரமணிய சாமிக்கு தீர்த்த அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. மதியம் தேரோட்டம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், என பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !