தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :195 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.எம்.,நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கல்யாணம் நேற்று மூன்று மணி ரேத்திற்கு மேலாக நடைபெற்றது. இதை தேரழுந்துார் ஸ்ரீலஸ்ரீஉ,வே.பாலாஜ் பட்டாச்சார்யர் ஸ்வாமிகள், அர்ச்சகர்கள் ஸ்ரீராம், குருவாயூரப்பன், அழகு கிரிதரன் நடத்தினர். பெரியகுளம் ஸ்ரீ கிருஷ்ணதாசர் ஸ்ரீநம்மத்வர் திருக்கல்யாணம் குறித்து பேசினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதை தொடர்ந்து மாலை பெருமாள் தாயார் சகிதம் எம்.வி.எம் ., நகரில் வீதிகளில் வலம் வந்தார்.