கோவை கோதண்ட ராமஸ்வாமி கோவிலில் உத்திர திருவிழாராமர் வீதி உலா
ADDED :3 hours ago
கோவை: ராம்நகர் கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை மூலவருக்கும், உற்சவருக்கும் ஏக காலத்தில் திருமஞ்சனமும். சிறப்பு அலங்காரமும் பாராயணமும் நடந்தது. மாலை உற்சவமூர்த்திகள் மேளதாளங்கள் முழங்க வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.