உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

 வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.


வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமி உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு தினமும் காலையில் திருமஞ்சனம், மாலையில் சுவாமி உள்புறப்பாடு நடக்கிறது. விழாவில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:௦௦ மணிக்கு பெருந்தேவி தாயாருக்கும், வரதராஜ பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக மாலை மாற்றுதல், சீர்வரிசை கொண்டு வருதல் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !