சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தோப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உற்சவம் கடந்த 22ஆம் தேதி காப்பு கட்டி தொடங்கியது. நாள்தோறும் தோப்படி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடுகள் நடைபெற்று இரவு சுவாமி விதி உலா நடைபெற்று வந்தது . விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக தோப்படி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருனார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரினை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை சென்றடைந்தது வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.