உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திராசுபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை

திராசுபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை

கடலுார்: திராசுபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடந்தது. பண்ருட்டி அடுத்த திராசுபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகன் சுவாமிக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !