உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

திருப்பூர்: ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்நாளை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும், 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். கடந்த மாதம், 18ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் துவங்கியது. தேவாலயங்களில் தினமும் சிலுவைப்பாதை ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. தவக்கால நிகழ்வின் முக்கிய நாட்களின் துவக்கமான, புனித வியாழன் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன், தன் சீடர்களின் பாதங்களை கழுவினார். இதை உணர்த்தும் வகையில், தேவாலய குருக்கள், 12 பேரை சீடர்களாக அமர வைத்து, அவர்களின் பாதங்களை கழுவினர்.ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்ட நாளை நினைவு கூரும் வகையில், இன்று, புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. ஏசுவின் சிலுவை பாடுகள், அவை உணர்த்தும் நற்செய்தி குறித்த ஆராதனை, சர்ச்களில் நடத்தப்பட்டது. திருப்பூர் புனித கத்தரீனம்மாள்; குமார் நகரிலுள்ள புனித ஜோசப்; அவிநாசி புனித தோமையார் உள்ளிட்ட கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ., சர்ச்களில், புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. நாளை மறுநாள் ஏசுவின் உயிர்ப்பை நினைவுகூரும் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !