உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் பங்குனி தெப்பல் உற்சவம்: சுவாமிக்கு சிறப்பு ஆராதனை

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி தெப்பல் உற்சவம்: சுவாமிக்கு சிறப்பு ஆராதனை

மயிலம்: மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில் தெப்பல் உற்சவம் நடந்தது.


மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. 31ம் தேதி தேர் திருவிழாவும், நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு அக்னி குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் 1ம் தேதி இரவு 11:50 மணிக்கு மலை கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மலை கோவிலில் இருந்து சுப்ரமணியர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் கோவில் அருகேயுள்ள அக்னி குளத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பலில், நள்ளிரவு 12:20 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராய் சுப்ரமணியர் சுவாமி தெப்பல் குளத்தை மூன்று முறை வலம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !