விழுப்புரம் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED :19 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் கோவிந்தசாமி நகர் சிவ, விஷ்ணு கோவில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சன்னதியில் பங்குனி உத்திரத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மகா அபிேஷகம், காலை 9:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.