உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் விமரிசை

ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் விமரிசை

செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.


செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பகுதிக்கு உட்பட்ட சேம்புலிபுரம் கிராமத்தில் வேண்டியதை நிறைவேற்றும் ஸ்ரீ ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு மூலவர் விக்ரகமாக 13 அடி உயர ஸ்ரீ ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார். ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி, புத்தாண்டு, பங்குனி உத்திரத்தில் சீதா ராமர் திருக்கல்யாணம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு சீதா ராமர் திருக்கல்யாண உற்சவத்தை விமரிசையாக நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். கடந்த 31ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஆஞ்சநேய திருமஞ்சனம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கோபூஜை, ஆஞ்சநேயமூல மந்திர ஹோமம் போன்ற சிறப்பு பூஜைகள் நடந்தன.முக்கிய நிகழ்ச்சியான சீதா ராமர் திருக்கல்யாண உத்சவம் மாலை 6:00 மணிக்கு துவங்கி, இரவு 8:50 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் சேம்புலிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !