உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று பெட்டிகள்

மூன்று பெட்டிகள்

மகர சங்கராந்தி அன்று திருவாபரணப்பெட்டி சபரிமலைக்கு வரும். பந்தள ராஜனின் காணிக்கையான ஆபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி மூன்றும் இதில் அடங்கும்.  இதில் ஆபரணப்பெட்டியில்தான் ஐயப்பனின் ஆபரணங்கள் இருக்கும். அவை,
* திருமுக மண்டலம் (முகக்கவசம்)
* பூரணா, புஷ்கலா தேவியர் உருவம்
* பெரிய, சிறிய வாள்
* இரண்டு யானை உருவம்
* கடுவா எனப்படும் புலி உருவம்.
* வில்வமாலை (தங்க இதழ்களால் ஆனது)
* சரப்பொளி மாலை
* நவரத்தின மாலை
* வெள்ளி கட்டிய வலம்புரிச் சங்கு
* பூத்தட்டம்  (பூக்கள் வைக்கும் தங்கத்தட்டு)
* நவரத்தின மோதிரம் வெள்ளிப் பெட்டியில் தங்கக்குடம், பூஜை பாத்திரம் இருக்கும். இந்த தங்கக்குடத்தால் சுவாமிக்கு பின்னர் நெய் அபிஷேகம் செய்யப்படும். கொடிப்பெட்டியில் யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை, உடும்பாறை மலைக்கான கொடிகள், குடை, யானை ஊர்வலத்துக்கானப் பொருட்கள் இருக்கும்.

ஆபரணப்பெட்டி தவிர்த்த இரண்டு பெட்டிகளும் மாளிகை புறத்துக்கு எதிர்முனையில் உள்ள மணிமண்டபம் கொண்டு செல்லப்பட்டு எழுந்தருளல் நிகழ்வு நடக்கும். அப்போது யானைக்கு அந்தப் பட்டத்தை சாத்தி ஊர்வலம் நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !