உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோசாலைகளில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாட்டம்!

கோசாலைகளில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாட்டம்!

 தமிழகத்தில், வருமானம் அதிகமாக வரக்கூடிய கோவில்களில் பக்தர்கள், பசுக்களை தானமாக வழங்குவர். அதை இந்து சமய அறநிலையத்துறை, அந்தந்த கோவில்களுக்குச் சொந்தமான கோசாலைகளில் வைத்து பராமரித்து வருகின்றனர். அதிகமான பசுக்களை தானமாக பெறும் போது, தனியார் கோசாலை நிறுவனங்களிடம், கோவில் நிர்வாகம் ஒப்படைக்கும். அவ்வாறு தமிழகம் முழுவதும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாடுகள், கோசாலைகளில் உள்ளன. குறிப்பாக, திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவில், பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் போன்ற கோவில்களில், பெரிய அளவில் கோசாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கோசாலைகளில், மாட்டுப் பொங்கல் விமர்சியாக கொண்டாடப் பட்டது.கோசாலை நிர்வாகத்தினர், மாடுகளை குளிப்பாட்டி, கும்குமம், சந்தண மிட்டு மாலை இட்டனர். மேலும், மாடுகளின் உடலில் வண்ண வண்ண புள்ளிகளிட்டு அலங்காரம் செய்து வழிபட்டனர்.சென்னையில், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், வடபழனி, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில், மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா கொண்டு செல்லப்பட்டது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !