சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :22 hours ago
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரவு கேடயத்தில் எழுந்தருளி அம்மன் வலம் வந்து அருள்பாலிக்கிறார். விழா நாட்களில் தினமும் அம்மன் காலையில் பல்லக்கிலும், இரவு சிம்மம், பூதம், அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வரும் 13ம் தேதி வெள்ளிக்கு திரை வாகனத்தில் அம்மன் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.