கடல் கடந்து அமெரிக்கா சென்ற அனுமன்: 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில், 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சிலையின் வரவேற்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஒரே கிரானைட் கல்லால் இந்த பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிலை சிற்பக் கலைஞர்களால் நுணுக்கமாக உருவாக்க 7 ஆண்டுகள் ஆனது. இத்தனை பெரிய உயரமான ஹனுமான் சிலை அமெரிக்காவில் பிரதிஷ்டை செய்ப்படுவது இதுவே முதல் முறை. இந்த பிரதிஷ்டை விழாவில் மேரிலாண்ட் மாநிலத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இது அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களை நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.