உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரியில் சங்கர ஜெயந்தி மகோத்ஸவம்: ஏப்., 18 ல் துவக்கம்

சிருங்கேரியில் சங்கர ஜெயந்தி மகோத்ஸவம்: ஏப்., 18 ல் துவக்கம்

சிருங்கேரி: சிருங்கேரியில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி மகோத்ஸவம் வரும் ஏப்ரல் 18ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


இன்று நாம் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களாகத் திகழ்வதற்கு, பரமசிவனின் அவதாரமான ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் அயராத முயற்சிகளே முழுமுதற் காரணமாகும். பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, அந்த மகான் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு, உபநிடதங்களின் சாரமான அத்வைத தத்துவத்தைப் பரப்பினார். தொலைநோக்குப் பார்வையுடன், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு ஆம்னாய பீடங்களை நிறுவினார்.


 சிருங்கேரியில் நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தார்மீக அனுஷ்டானங்களில், ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சாரியாரின் சன்னதியில் நடைபெறும் சிறப்புப் பூஜைகள்; வேத பாராயணம் மற்றும் ஸ்ரீ வித்யாரண்ய வேத பாஷ்ய பாராயணம்; ஜகத்குரு மகாசுவாமிகளின் முன்னிலையில் நடைபெற உள்ளது. உபன்யாசங்கள்; வேத போஷக சபையின் கீழ் நடைபெறும் வேத வித்வான்களின் மாநாடு மற்றும் அதில் சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கௌரவங்கள், அத்துடன் பிரம்மாண்டமான ரதோத்ஸவம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வேத வித்வான்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !