துணிவே துணை
ADDED :3 days ago
பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது அவனுடைய வாழ்நாள் லட்சியமும் கூட. போட்டிக்காக அவன் வாங்கி வைத்திருந்த ‘ஷூ’ காணாமல் போனது. ஆனாலும் அவன் நம்பிக்கை இழக்கவில்லை. வீடு, தெரு ஓரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் தேடினான். அதில் வெவ்வேறு அளவு கொண்ட இரண்டு ஷூ கிடந்தன.
அதை அணிந்த போது ஒன்று காலுக்கு பொருத்தமாகவும், மற்றொன்று பெரிதாகவும் இருந்தது. நிறைய சாக்ஸ்களை அணிந்து தன் காலுக்கு பொருத்தமாக்கினான். துணிச்சலுடன் போட்டியில் பங்கேற்ற அவனுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அந்த இளைஞன் யார் தெரியுமா... அவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் தோர்ப்.